
ஊத்துக்குளி அருகே லாட்டரி விற்றவர் கைது
ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.