உலகக் கோப்பை மைதானத்தில் பணியின் போது தவறி விழுந்து பாதுகாவலர் மரணம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி மைதானத்தில் காவலர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கென்யாவைச் சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பணியில் இருந்தபோது லூசில் மைதானத்தின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். புலம்பெயர்ந்த தொழிலாளியான ஜான் நு கிபுயே உயிரிழந்தார். சனிக்கிழமை பணியில் இருந்தபோது 8வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். ஜானுக்கு 24 வயது. ஜானின் முதலாளி, அவரது மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜானின் சகோதரி அன்வாஜிரு, அவருடைய நீதிக்காக போராட தங்களிடம் போதிய பணம் இல்லை, ஆனால் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புவதாக கூறினார். ஜானின் மரணம் குறித்த விசாரணையில், தோஹாவில் உள்ள ஹமாத் பொது மருத்துவமனையின் ஐசியூவில் அவர் அனுமதிக்கப்பட்டதற்கான பதிவுகள் கிடைத்தன. இதையடுத்து வெளியான விவரங்களின்படி, தலையில் பலத்த காயம் மற்றும் முகத்தில் எலும்பு முறிவுகளுடன் இடுப்பு எலும்பு முறிவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *