
உன்னி அப்பம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
வாழைபழம் – 1
வெல்லம் – 1/2 கப்
ஏலதூள் – 1/4 தே.க
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் வைக்கவும். ஆப்ப கடாயில் குழிகளில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் ஒரு பெரிய ஸ்பூனால் எடுத்து விடவும். நன்றாக வெந்த்ததும் திருப்பி போட்டு மறுபக்கமும் இதே போல் நன்றாக வெந்தவுடன் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்னெய் நன்றாக வடிந்ததும் எடுத்து சாப்பிடலாம். சூப்பரான உன்னி அப்பம் ரெடி