
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது மகிழ்ச்சி – நடிகர் விஷால்
லத்தி படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதயாக இருந்தபோதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான்.