
ஆலிவ் எண்ணெய் தரும் நன்மைகள்
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது சுத்தமான வடிவத்தில் பெறப்பட்டுள்ள எண்ணெய். அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டான பாலிஃபீனால் அதிக அளவில் இருக்கிறது. ஆலிவ் ஆயில், உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பை ஆலிவ் ஆயில் கணிசமாக குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.