
‘ஆனந்தம் பரமானந்தம்’ திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீசாகிறது
மலையாளத்தில் இந்திரன்ஸ், ஷரபுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் ஷாஃபி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் பரமானந்தம்’. இந்த படத்திற்கு கிளீன் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் இம்மாதம் 23 ம் தேதி திரைக்கு வெளி வரவுள்ளது. அனகா நாராயணன் கதாநாயகியாக நடிக்கும் குடும்ப நகைச்சுவை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தொழில் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வு வாழ்க்கை நடத்தும் தபால்காரர் திவாகரகுருப் மற்றும் வளைகுடாவில் இருந்து திருமணம் செய்துகொள்ளும் கனவோடு வீடு திரும்பும் பி.பி.கிரிஷ் என்ற இளைஞனைச் சுற்றியே கதை செல்கிறது.