
அரக்கோணத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதிகளை சேர்ந்த சிவக்குமார் மகன் பன்னீர் செல்வம் (22), முனிசாமி மகன் திலிப் (26), பிரபாகரன் மகன் கவுதம் (21), ஏழுமலை மகன் போஜி (25), பாலாஜி மகன் கவுதம் (26) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர். மேலும் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.