அமெரிக்காவில் கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்த மாணவர் மரணம்

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலத்தில் இருந்து இந்திய-அமெரிக்க மாணவர் ஒருவர் குதித்து உயிரிழந்தார். பாலத்தில் இருந்து 16 வயது சிறுவனின் சைக்கிள், தொலைபேசி மற்றும் பை போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாலை 4.30 மணியளவில் பாலத்தில் இருந்து மாணவர் குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்படையினர் 2 மணி நேரம் நீண்ட தேடுதல் வேட்டை நடத்திய போதிலும் 16 வயது மாணவனின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *