அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் மூழ்கிய நாள் டிசம்பர் 14

1907 – அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

1909 – ஆத்திரேலியத் தலைநகரை அமைப்பதற்கான நிலத்தை நியூ சவுத் வேல்சு மாநிலம்  ஆத்திரேலிய பொதுநலவாய அரசுக்கு வழங்கியது.

1911 – ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றது.

1918 – செருமனிய இளவரசர் பிரீட்ரிக்கு கார்ல் வொன் எசென் முதலாம் வைனோ என்ற பெயரில் பின்லாந்து மன்னராக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *