
அதிமுக நகராட்சித் தலைவருக்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்ற திமுக கவுன்சிலர்
செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செங்கோட்டை பேரூராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தங்களை ஆலோசிக்காமல் முடிவெடுப்பதாக கூறி திமுக 12வது வார்டு உறுப்பினர் இசக்கித்துரை பாண்டியன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.