‘அஜயன்றே இரண்டாம் மோஷனம் ‘ படப்பிடிப்பிற்கிடையே ஆசிய அகாடமி விருதை பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடிய பசில் ஜோசப்

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய அகாடமி விருதுகள் 2022 இல் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றதன் மூலம் மலையாள சினிமாவின் பெருமையைப் பெற்றுள்ளார் பசில் ஜோசப். நடிகர் டோவினோ நடித்த ‘அஜயன்றே இரண்டாம் மோஷனம் ‘ படத்தின் செட்டில் இருந்து விருதை பெற சென்றார். விருது விழா முடிந்து செட்டுக்கு திரும்பிய பாசில் கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மின்னல் முரளி படத்துக்கு விருது கிடைத்திருந்தது . இந்த விருதுக்காக பதினாறு நாடுகள் போட்டியிட்டன. இப்போது அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில், டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அஜயன்றே இரண்டாம் மோஷனம் ‘. இப்படத்தில் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆறு மொழிகளில் தயாராகும் இப்படம் பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *