
9 லட்சத்திற்கும் மேல் காலியாக இருக்கும் மத்திய அரசு பணிகள்..!!
மக்களவையில் காலியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மார்ச் 2021 செலவினத் துறை சம்பள ஆய்வு அறிக்கையின்படி, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில் இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலியிடங்கள் உள்ளன.