
25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘பாஸ் பார்ட்டி’ பாடல்
இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154-வது படம் ‘வால்டேர் வீரய்யா’. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘பாஸ் பார்ட்டி’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘பாஸ் பார்ட்டி’ பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
It's a Blockbuster #BossParty from #WaltairVeerayya 💥💥
25M+ views & counting🕺💃
– https://t.co/9kC65KkoBp#WaltairVeerayyaOnJan13thMegastar @KChiruTweets @RaviTeja_offl @dirbobby @shrutihaasan @UrvashiRautela @ThisIsDSP @SonyMusicSouth pic.twitter.com/ZFKk5703lC
— Mythri Movie Makers (@MythriOfficial) December 14, 2022