
ஹாங்காங்கில் படுத்த படுக்கையாக இருந்த மகளை கொன்ற சம்பவத்தில் கைதான பெற்றோர்
ஹாங்காங்கில் படுத்த படுக்கையாக இருந்த மகளைக் கொன்ற வழக்கில் வயதான பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹாங்காங்கின் வோங் தை சின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 74 வயதான தாய் மற்றும் 79 வயதான தந்தை ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றுள்ளது. படுத்த படுக்கையாக இருந்த தங்கள் 47 வயது மகளை சுத்தியலால் தாக்கி கொன்றனர். தாக்குதலுக்குப் பிறகு, தாயே காவல்துறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பொலிசாருக்கு போன் செய்து, மகளை சுத்தியலால் தாக்கியதாகவும், விரைவில் வருமாறும் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணைக் கண்டனர். வயதான பெற்றோர், அவர் இறந்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர், ஆனால் போலீசார் வந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்திருந்தார் . போலீசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் .