
ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கடையில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.