வீட்டிலேயே பானி பூரி செய்வோம் வாங்க..!!

தேவையான பொருட்கள்:

* சின்ன பூரி/பானி பூரி – 24 * எலுமிச்சை – 1 சன்டே ஸ்பெஷல் – மட்டன் தலைக்கறி வறுவல்சன்டே ஸ்பெஷல் – மட்டன் தலைக்கறி வறுவல் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு… * உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்தது) * பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) * சீரகத் தூள் – 1 டீஸ்பூன் * சாட் மசாலா – 1 டீஸ்பூன் * ப்ளாக் சால்ட் – சுவைக்கேற்ப பானிக்கு… * புதினா – 1/2 கப் * கொத்தமல்லி – 1 கப் * இஞ்சி – 1 இன்ச் * பச்சை மிளகாய் – 2-3 * புளி – 1 எலுமிச்சை அளவு * வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன் * சீரகத் தூள் – 1 டீஸ்பூன் * சாட் மசாலா – 1 டீஸ்பூன் * தண்ணீர் – 1/4 கப் (அரைப்பதற்கு) * தண்ணீர் – 1 கப் * ப்ளாக் சால்ட் – சுவைக்கேற்ப * ஐஸ் கட்டிகள் – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கையால் பிசைந்து கொள்ள வேண்டும். * பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சீரகத் தூள், சாட் மசாலா, ப்ளாக் சால் சேர்த்து நன்கு கையால் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார். * பின் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 கப் நீரை ஊற்றி, வேண்டுமானால் இன்னமும் நீரை ஊற்றி, வெல்லம், சீரகத் தூள், சாட் மசாலா, ப்ளாக் சால்ட் ஆகியவற்றை சேர்த்து, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பானி தயார். * பின்னர் ஒரு பானி பூரியை எடுத்து அதன் நடுவே துளையிட்டு, அதனுள் முதலில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்க வேண்டும்.

இதே போன்று அனைத்து பானி பூரியிலும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மேலே எலுமிச்சை சாற்றினை பிழிய வேண்டும். * பின் தயாரித்து வைத்துள்ள பானியை அதில் ஊற்றினால், மும்பை ஸ்டைல் பானி பூரி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *