விளையாட்டு கூட்டமைப்பிற்கு போதிய நிதி வழங்கப்படுகிறது – அனுராக் தாக்கூர்

பாராளுமன்ற மக்களவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில்,

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கேலோ இந்தியா மையம் ஒன்றுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதித்துள்ளது. அம்மாநிலத்தில் மேலும் 23 பன்னோக்கு விளையாட்டு அரங்குகள் உட்பட 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி முகாம்கள் உட்பட விளையாட்டுக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகத் தரத்திலான பயிற்சி வசதிகளுக்குப் போதிய நிதியை அரசு வழங்குகிறது.

கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான உதவி, ஒலிம்பிக் மேடை இலக்கு, இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின் விளையாட்டுகள் மேம்பாடு போன்ற திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் அடிப்படையில் அவற்றின் தொழில்நுட்ப சாத்தியம் மற்றும் திட்ட வழிகாட்டுதல்கள் மூலம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *