
விரக்தியில் ரொனால்டோ பதிவிட்ட 3 வார்த்தைகள்
கால்பந்து உலகின் முன்னணி வீரரான போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
ஆனாலும் போர்ச்சுக்கல் அணிக்காக உலகக் கோப்பையை இதுவரை வென்று கொடுத்தது கிடையாது. 37 வயதாகும் இவரது தலைமையில் கத்தார் உலககோப்பை கால்பந்து தொடரில் களமிறங்கிய போச்சுக்கல் அணி, காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது.
இதனால் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வீரர்கள் அறைக்கு செல்லும்போது அழுது கொண்டே சென்றார். மேலும் காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதி ஆட்டங்களில் மாற்று வீரராகவு களம் இறக்கப்பட்டார். இதுவும் அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது தான் இருக்கும் நிலையை யதார்த்தத்தின் 3 அம்சங்கள் என மூன்று வார்த்தைகளில் விவரித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ”Pain (வலி), Uncertainty (உறுதியற்ற நிலை) And Constant work (தொடர்ந்து வேலை)” எனப் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு எளிதில் பொருள் புலப்படாத இந்த மூன்று வார்த்தைகளில் தனது தற்போதைய நிலையை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.