
வாலிபரை மிரட்டி பணத்தை பறித்தவர் கைது
ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500 பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்துள்ளனர்.