
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய பேட்டிங்
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்த தொடரின் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், ராகுல் ஆடுவார் என்று தெரிகிறது. வங்காளதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.
அதன்படி, இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், முன்னதாக போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, வங்காளதேசத்திற்கு எதிராக முதலில் களமிறங்குகிறது.