ரூ.2,815 கோடி செலவில் காஷ்மீரில் பாதுகாப்புத் திட்டங்கள்..மத்திய அரசு தகவல்..!!

ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2022ல் 4 பேரும், 2020ல் 1 பேரும், 2021ல் 4 பேரும் கொல்லப்பட்டனர்.இதில் காஷ்மீர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராய், கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் சுமார் ரூ.2,815 கோடி செலவிட்டுள்ளது என்றார். கடந்த 2019-20ஆம் ஆண்டு ரூ. 1,267 கோடி, 2020-21ல் ரூ.611 கோடி மற்றும் 2021-22ல் ரூ.936,095 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *