
ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் திருட்டு
ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 51), விவசாயி. இவருக்கு மலையடிப்பட்டி பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. சம்பவத்தன்று இவர் தங்கை பிரிய தர்ஷினி, வேலைக்கார பெண்ணுடன் அங்கு சென்று சுத்தப்படுத்திவிட்டு வீட்டு கதவை பூட்டி திரும்பி விட்டனர். நேற்று காலை அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி செம்பு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.