
ரவி தேஜா நடித்துள்ள தமாகா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா ?
டோலிவுட் வட்டாரத்தில் ,டீஸர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்க்குப் பிறகு, ரவி தேஜா மற்றும் திரிநாத ராவ் நகினாவின் மாஸ் ஆக்ஷன் எண்டர்டெய்னர் தமாகா பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதில் ஏறக்குறைய அனைத்து பாடல்களும் சார்ட்பஸ்டர்களாக மாறியது மற்றும் மக்கள் ‘ஜிந்தக்’ மற்றும் ‘தண்டகடியல்’ பாடல்களை விரும்பினர். இந்நிலையில் வெற்றிகரமான இசை விளம்பரங்களுக்குப் பிறகு, படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தமாகா படத்தின் டிரைலர் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. டிரெய்லர் போஸ்டரில் ரவி தேஜா கிளாஸ் அவதாரத்தில் கண்ணாடி மற்றும் சூட் அணிந்திருப்பதை வெளிகாட்டுகிறது. ரவி தேஜா கிளாஸ் மற்றும் மாஸ் அவதாரங்களில் இரட்டை வேடத்தில் கலக்கவிருக்கிறார் . பீம் இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதாநாயகி ஸ்ரீலா.