
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : தமிழகத்திற்கு எதிராக ஐதராபாத் அணி பேட்டிங்
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் ஐதராபாத்தில் நடக்கும்’பி’ பிரிவில் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஆட்ட முதல்நாள் நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது. சதம் விளாசிய கேப்டன் தன்மே அகர்வால் 116 ரன்களுடனும், மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட் சாய்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.