
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் : 46 ரன்களில் சுருண்டது அரியானா
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் ரோடாக்கில் நடைபெறும் ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் இமாசலபிரதேசம்-அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த அரியானா அணி முதல் இன்னிங்சில் 20.4 ஓவர்களில் 46 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இமாசலபிரதேச அணி தரப்பில் வைபவ் அரோரா 4 விக்கெட்டும், சித்தார்த் ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இமாசலபிரதேச அணி நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தது. பிரசாந்த் சோப்ரா 137 ரன்னில் கேட்ச் ஆனார். ராகவ் தவான் 86 ரன்னுடனும், அங்கித் கல்சி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.