மேட்டூர் அணையில் இருந்து 24,100 கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்புவரை அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 600 கனஅடியாகவும், நேற்று காலையில் வினாடிக்கு 21 ஆயிரத்து 600 கனஅடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று இரவு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 37 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு 11 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

உபரிநீர் போக்கி மதகுகள் உயர்த்தப்படும் முன்பாக எச்சரிக்கை சங்கு ஒளிக்கப்பட்டது. உபரிநீர் போக்கி மூலம் வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நீர்வரத்து சற்று குறைந்து 21,000 ஆயிரம் கனஅடியாக வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *