
‘மெட்ராஸ் ஐ’… குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
1) “படிக பன்னீர்” ஒரு துளி வீதம் கண்களில் விடலாம். கண் சிவப்பு, பீளை வெளியேறுவது விரைவில் நிற்கும்.
2) சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து, சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதில் நனைத்து, அந்த துணியை வைத்து கண்ணை துடைக்கலாம், மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி,
3) நந்தியாவட்டை பூச்சாற்றை பிழிந்து கண்களில் விட்டு வர கண் எரிச்சல், கண் வலி நீங்கும். மேலும், ஒவ்வொரு முறை கண்ணை துடைக்கும் போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.