மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் மீது வழக்கு

மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இசக்கி (55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர். இதை இசக்கி தட்டிக் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பார்வதி உள்பட 5 பேரும் சேர்ந்து இசக்கியை செங்கல்களாலும், கம்பாலும் தாக்கினர். இதுகுறித்து இசக்கி மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் பாலசுப்பிர மணியன், அவரது மனைவி பார்வதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *