
முள்ளங்கி-பார்லி சூப் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
ரோஸ் முள்ளங்கி – 100 கிராம்
வெங்காயம் – பாதி
தக்காளி – ஒன்று
பூண்டு – 4 பற்கள்
கேரட் – ஒன்று
பார்லி – 50 கிராம்
பால் – கால் கப்
ரசப் பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித் தழை – தேவைக்கேற்ப
செய்முறை:
முள்ளங்கி மற்றும் கேரட்டைத் துருவி வைக்கவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் பார்லி, ரசப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும். அனைத்தும் வெந்து சுண்டி வந்ததும் பால் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.