முதல் டெஸ்ட் போட்டி…வங்கதேசத்துக்கு எதிராக 278 ரன்கள் குவித்த இந்தியா..!!

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். இதன்படி இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாகூர் அகமது மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. போட்டிக்கான டாஸ் முடிந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி இன்றைய முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக வங்கதேச வீரர் தாஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *