
மாற்றுத் திறனாளி ரசிகரை கைகளில் தாங்கி கொண்ட விஜய்… நெகிழ்ந்து போன ரசிகர்கள்
‘தீ தளபதி என்றும் எங்கள் நெஞ்சின் அதிபதி என்றும் நாங்க ஒண்ணும் சும்மா சொல்லல.. நீங்களே இந்த போட்டோக்களை பாருங்க’ என புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மாற்றுத்திறனாளி ரசிகருடன் இளைய தளபதி விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அந்த மனசு தான் சார் கடவுள்’ என டிரெண்டிங்கை இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். இதையடுத்து கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் என்றும் உனக்கு ரசிகரா இருப்பதே மகிழ்ச்சி தளபதி என்றும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை வெளியிட்டு கொண்டு வருகின்றனர்.