
மாணவி மீது ஆசிட் வீச்சு..மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!!
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட் வீசி இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர். அவரது முகம் மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிட் சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது குறித்து விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.