
மாணவி மீது ஆசிட் வீச்சு…குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..டெல்லி முதல்வர் உறுதி..!!
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட் வீசி இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர். அவரது முகம் மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இதை பொறுத்துக் கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு எப்படி தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார்.