
மழைநீர் தேக்கத்தை தடுக்க சென்னை மாநகராட்சி மாஸான திட்டம்..!!
சென்னையில் மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க மாநகராட்சி புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில், தெருக்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, 10 அடி ஆழமுள்ள ‘மினி’ குளம் அமைக்கப்பட உள்ளது. அதில் நீர் உறிஞ்சும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மழை நீர் வடிகால்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை மேற்பரப்பு வடிகால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த குளங்களை சுற்றி தோட்டங்கள், தேவையான விளக்குகள் மற்றும் பெஞ்ச் இருக்கைகள் செய்யப்படுகின்றன. இவை 47 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க் போல அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 5 இடங்களில் இந்த பூங்கா அமைக்க ரூ. 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.