
மரவள்ளி கிழங்கு உருண்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – அரைக் கிலோ
சர்க்கரை (அ) வெல்லம் – 100 கிராம்
ஏலக்காய் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
செய்முறை:
மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அதை இட்லி பானையில் வைத்து வேக வைத்து கொள்ளவும். அதில் தேங்காய் துருவல், சர்க்கரை (அ) துருவிய வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். இப்படியே கிழங்கு புட்டாகவும் பரிமாறலாம். இந்த கலவையை உருண்டையாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து கிழங்கு உருண்டையாகவும் பரிமாறலாம்.