
பூட்டிய வீட்டில் புகுந்து மர்மநபர் கொள்ளை
தஞ்சை தெற்கு மானோஜிபட்டி லட்சுமி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசீலன் (42 ). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.