புரோ கபடி லீக் : முதல்முறையாக அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்

12 அணிகள் பங்கேற்ற புரோ கபடி 9-வது லீக் போட்டியில், டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று மும்பையில் நடைபெற்றன.

இதில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *