
புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கிய மலையாள நடிகர் டொவினோ தாமஸ்
மலையாள சினிமாவின் பேவரிட் நட்சத்திரமான டொவினோ தாமஸ் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டைனமிக் காரை வாங்கியுள்ளார்.இந்த புதிய வாகனத்தை தனது மனைவி லிடியா மற்றும் மகன்கள் இசா மற்றும் தஹானுடன் டோவினோ பெற்றுக்கொண்டார். ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மினி கூப்பர் சைட்வாக் எடிஷன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக் போன்றவை டொவினோவின் ஸ்பேஷல் கலெக்ஷனில் உள்ள மற்ற வாகனங்களாகும்.