
பிரிட்டனில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு …. மூன்று குழந்தைகள் பலி
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். பர்மிங்காமில் உள்ள சோலிஹுல் என்ற இடத்தில் உறைந்த ஏரியில் விழுந்து மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் இன்று பல விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மூடப்பட்ட கேட்விக் மற்றும் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் லூடன் விமான நிலையத்தின் பல விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் மைனஸ் 15 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருக்கிறது .