
‘பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்’.. இயக்குனர் ராஜமவுலி
இயக்குனர் ராஜமவுலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அதிக சம்பளம் தருவதினால் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன. பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு இயக்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையெனில் மூழ்கிவிடுவார்கள்” என்று பேசியுள்ளார்.