
‘பாரத் ஜோடோ யாத்திரை’…ராகுல்காந்தியுடன் கைக்கோர்த்த ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்..!!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை வந்தடைந்துள்ளது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் 98வது நாளான இன்று, ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார். ராஜஸ்தானின் சுவாமி மாதோபூர் பகுதியில் ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன் நடந்து சென்றார். காங்கிரஸ் ஆட்சியின் போது ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.