
பழங்களை சாப்பிடும்போது கவனம் தேவை தெரியுமா?
பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும். ஏனெனில் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கும் பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும்.