
பரமத்திவேலூர் அருகே செல்போன் கடையில் திருட்டு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் கடையின் உரிமையாளர் பிலால் (35) கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. மேலும் கடையின் இருந்த செல்போன் கவர்கள் திருடி பாக்கெட்டில் வைத்ததும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இது குறித்து பிலால் அளித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீசார் \வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.