
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன்- அமைச்சர் உதயநிதி ட்வீட்
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தமிழக முதல்வரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.