
பட்டாணி மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பட்டாணி – ஒரு கப்
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
காய்ந்த மிளகாய் – ஒன்று (அ) 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பட்டாணியில் தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு வேக வைத்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்துடன், தக்காளி, காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் சிறிது உப்புச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஈரத்தன்மை குறைந்து சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். மசாலாவுடன் பட்டாணி ஒன்றாகச் சேர்ந்து வரும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.