
நெய் முறுக்கு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – ஒரு கிலோ
பொரிக்கடலை – அரை கிலோ
எள் – ஒரு மேசைக்கரண்டி அல்லது சீரகம்
தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்
நெய் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊறவைத்து உரலில் மாவாக்கி ஈரப்பசை போகும் வரை வறுத்து கொள்ளவும். பொரிகடலையை உரலில் இடித்து மாவாக்கிக் கொள்ளவும். உப்புத் தண்ணீர் தெளித்து எள் போட்டு நெய்யைக் காயவைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை வைத்து சூடான எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுக்கவும்.