
நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது – ராஜமவுலிக்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து
‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இந்நிலையில், ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ராஜமவுலி அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள். சிறந்த இசையமைப்பாளருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.