
நாமக்கல் அருகே பிரபல ரவுடி கைது
நாமக்கல் பகுதியில் வசித்து வருபவர் தனுஷ் பிரபல ரவுடியான இவர், சமீப காலமாக நாமக்கல் நகரில் வழிப்பறி மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து நாமக்கல் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.