
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நுழையும் வாகனங்களுக்கு அபராதம்
நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். அப்போது பஸ் நிலை யத்திற்குள் நிறுத்தப்பட்டி ருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் அண்ணா பஸ் நிலையத்திற்கு உள்ளாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட் டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் 25 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.