நடிகை தீபிகா படுகோனே பதான் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இதில் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு “பதான்” திரைப்படத்தின் முதல் பாடலான ‘அழையா மழை’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த பாடலில் தீபிகா நீச்சலுடையில், கவர்ச்சியாக நடித்து உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கவர்ச்சி உடையில் நடனமாடுவதற்காக தீபிகா படுகோனே சம்பளத்தை உயர்த்தியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *